எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Sunday, 21 February 2010

"என் பெயர் முத்தையா" அவள் பெயர் தமிழரசி ஒளிப்பதிவாளர்பிறப்பு: 12.09.1982
சொந்த ஊர்: துறையூர் (திருச்சி மாவட்டம்)
படிப்பு:Bsc.(VisCom).,
MA (Journalism & masscommunication)
MBA(Human Resourse Management)
Msc.(Media Managemant)
குடும்பம்: அப்பா: கோபாலரத்தினம்; அம்மா: பிரேமா குமாரி

கற்றுத்தந்தவர்கள்: ரவி .கே. சந்திரன், ரவிவர்மன், கதிர், ராஜரத்னம்

இதற்கு முன் வெளியான படங்கள்: பூ (2008), கண்டேன் காதலை (2010)
அவள் பெயர் தமிழரசி படத்திற்க்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்த பிறகு படத்தின் கதை சுருக்கத்தை சொல்லும் Trailer படம் எடுக்க நினைத்து மீராகதிரவன் ஒரு ஒளிப்பதிவாளரை தேடிக்கொண்டிருப்பதாக நண்பர் சொன்னார். சுப்ரமணியபுரம், கற்றது தமிழ் ஒளிப்பதிவாளர் கதிரிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்துகொண்டு இருந்தபோது, நண்பர் ஹரி மூலமாக மீரா கதிரவனின் அறிமுகம். மிகக் குறைந்த வசதிகளுடன் கஷ்டப்பட்டு Trailerஎடுத்தோம். அதன் பிறகு நான் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். திடீரென ஒருநாள் மீரா கதிரவன் Phone செய்து, Moser Baerநிறுவனம் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் என்னையே ஒளிப்பதிவாளராக தேர்வு செய்திருப்பதாகவும் சொன்னார். அவள் பெயர் தமிழரசியில் பணியாற்ற அழைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் சந்தோசப்பட்டேன்.

அவள் பெயர் தமிழரசி படத்தை தயாரிப்பதற்கு முன்பு Moser Baer நிறுவனம் "பூ"படத்தை தயாரித்தது. மீரா கதிரவன் "பூ" படத்திற்கு ஒளிப்பதிவாளராக என்னை சிபாரிசு செய்தார். அவள் பெயர் தமிழரசி படத்தின் Trailer-ஐ பார்த்த இயக்குனர் சசி, "பூ" படத்தில் பணியாற்ற அழைத்தார். அதனால் "பூ" படம் என்னுடைய முதல் படம் ஆயிற்று.


அவள் பெயர் தமிழரசி படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டோம். படத்தில் நான்கு கட்டங்களில் கதை சொல்லப்பட்டுள்ளது. கதாநாயகனின் குழந்தைப்பருவம் வறட்சியாகவும், வளரும் பருவத்தில் கொஞ்சம் மழை, பசுமை போன்றவற்றையும் காட்டியிருக்கிறோம். அதன் பிறகு வாலிபவயதை முழுக்க முழுக்க பசுமையாக காட்டியிருக்கிறோம். அதற்காக வயல்வெளிகளிலும் பசுமையான இடங்களிலும் Shooting நடத்தினோம். கதாநாயகன் நாயகியை தேடி அலையும் காட்சிகளில் கொஞ்சம் Warm Colours (கதாநாயகன் Tiredness-ஐ காட்ட) பயன்படுத்தி இருக்கிறோம்.

இப்படி வெயில், மழை, வயல்வெளி என்று Shooting செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தால், அதற்கு நேர்மாறான காலநிலை (Climate) வந்தது. கஷ்டப்பட்டு Shooting எடுக்க வேண்டி இருந்தது. எனினும், எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இயக்குனரிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் தனஞ்சயன் மிகவும் துணையாக இருந்தார். தயாரிப்பில் உள்ள கஷ்டங்களையும், தொழிலாளர்களின் கஷ்டங்களையும் புரிந்துகொண்டார். அதனால்தான் படம் நன்றாக வந்துள்ளது. ஒரு அருமையான படத்தில் வேலை செய்ய வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
மீரா கதிரவன் அருமையான மனிதர். நல்ல மனம் கொண்டவர். என் நல்ல நண்பர். அவர் ஒரு திறமையான இயக்குனர். அவருக்கு யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்று தெரியும். அவர்தான் என் வாழ்கையை மாற்றியவர். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற கடவுளை பிராத்திக்கிறேன்.

எல்லா படங்களுக்கும் நான் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறேன். என்னுடைய முதல் படம் என்பதாலும் அருமையான Script என்பத்தாலும் அவள் பெயர் தமிழரசி எனக்கு Special. படம் மார்ச்-5 திரைக்கு வருகிறது. எல்லோரும் பார்த்து படம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள்.