எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Tuesday 16 February 2010

"என் பெயர் தனஞ்சயன்" அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்

"என் பெயர் தனஞ்சயன்"
அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்
பிறப்பு: May 14
படிப்பு: MBA (Marketing, Human Relations, IT)
பணி: Moser Baer நிறுவனத்தில் தலைமை நிர்வாகம்
அங்கீகாரம்/விருதுகள்:
மக்கள் தொலைக்காட்சி விருது: சிறந்த படம் "பூ" 2008
தமிழக அரசு மாநில திரைப்பட விருது: பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் "பூ" (2008)
Jaya TV விருது: சிறந்த புதுமுக தயாரிப்பாளர் "பூ" 2008


குடும்பம்...
அம்மா ஜகதம்மாள், அப்பா கோவிந்த். மனைவி லலிதா, இரண்டு மகள்கள் ரேவதி ஹரிதா. அப்பாவுக்கு சினிமாவில் ஆர்வமில்லை. அம்மா சினிமா ப்ரியை என் சிறு வயது முதலே நிறைய தமிழ் தெலுங்கு சினிமா (வாரத்திற்கு இரண்டு) கூட்டிப்போவார். "ஒருவன் தனக்கு விருப்பமுள்ளதை மட்டுமே செய்யவேண்டும்" என்ற தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. என் விருப்பங்களுக்கும் லட்சியத்திற்கும் பக்க பலமாக இருப்பது என் மனைவி.

லட்சியம்...
நான் சம்பந்தப் பட்ட துறையில் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் பெரிய நடிகர்களை வைத்து தரமான பொழுதுபோக்கு படங்களை தயாரிக்க விருப்பம். தமிழ் திரைப்படங்களை இயக்கவும் விரும்புகிறேன்.

"Moser Baer என்றால் தரமான படங்கள்..." எப்படி சாத்தியமாயிற்று?

குடும்பத்துடன் பார்க்ககூடிய படங்களை மட்டுமே தயாரிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த ஒரு அளவுகோல் தரமான கதைகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. சிறுவயது முதலே நிறைய கனவுகளோடும் சிந்தனைகளோடும் வளர்ந்தேன். நிறைய படிப்பதும் நல்ல படங்களை விரும்பி பார்ப்பதும் என்னை நல்ல படைப்பாற்றல் உள்ளவனாக வைத்திருக்கின்றன. கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ள யாரும் படைப்பாளி ஆகலாம். Ego இல்லாமல் சக தொழிலாளர்களுடன் வெளிப்படையாக பழகுவது, விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்வது இவையும் என் பலங்கள். முன்பை விட இப்போது திரைப்படத் துறை கட்டமைப்பு, இயங்கும் முறை பற்றி நிறைய தெரிந்து கொண்டுள்ளேன். தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம்.

"அவள் பெயர் தமிழரசி" தயாரிக்க காரணம்?

கதையை படித்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. உடனே மீரா கதிரவனை அழைத்துப் பேசினேன். அவர் "அவள் பெயர் தமிழரசி" படத்தை குறும் படமாக இயக்கி கொண்டு வந்திருந்தது அவரது மனத் தெளிவையும் பொறுப்புணர்ச்சியையும் சொன்னது. இதே போல் படத்தை எடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இந்த படத்தின் backdrop இதுவரை சொல்லப் படாதது. மிகவும் புதிய கதைக்களம்.



"அவள் பெயர் தமிழரசி" படக் குழுவினர்?

இயக்குனர் மீரா கதிரவன் மிகவும் பொறுப்புணர்ச்சியும் , சினிமாவின் மீது தீராத காதலும், திறமையும் கொண்டவர். அவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு. விஜய் ஆண்டனியும் மீரா கதிரவனும் இணைந்து தரமான பாடல்களை கொடுத்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் முத்தையாவும் எடிட்டர் ராஜா முகமதுவும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்துள்ளனர். இந்த கதைப்படி கதாநாயகனின் உடலமைப்பில் மூன்றுக்கும் மேற்பட்ட உருவ மாற்றம் தேவைப்பட்டது. அதனால் நிறைய மாதங்கள் காத்திருந்து நேரம் செலவிட்டு எடுக்க வேண்டி இருந்தது. (கிட்டதட்ட ஐந்து ஷெட்யூல்) வெயில் மழை என்று காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினோம். படக் குழுவினர் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்தனர்.


முழுமையாக படம் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

படத் தயாரிப்பில் நிறைய சவால்கள் கஷ்டங்கள். எல்லா கஷ்டங்களும் படத்தை முழுமையாக பார்த்த போது சந்தோசமாக மாறிவிட்டது. படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. சினிமாத்தனம் துளியும் இல்லாத, கிராம வாழ்வை இயல்பாக சொல்லும் யதார்த்தமான படம். It is a bold attempt by the Director. I am hopeful and confident that the audience would love it. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.

No comments:

Post a Comment